தாய்மை-குழந்தை நலன்

குழந்தைகள் வாயை திறந்து தூங்கினால் என்ன பிரச்சினையா இருக்கும்? அதை எப்படி சரிசெய்வது?

பெரியவர்கள் தூங்குவது மாதிரி குழந்தைகள் தூங்குவது இல்லை. அவர்கள் தூங்கும் போது மூச்சு வேகமாக இரைக்கலாம், கண்களை பாதியாக மூடிக் கொண்டு தூங்கலாம். இப்படி ஏகப்பட்ட வித்தியாசங்களில் குழந்தைகள் தூங்குகிறார்கள். மேலும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தூக்கம் வரவில்லை என்று வம்பு பிடிப்பதாக புகார் அளிக்கிறார்கள். அப்படியே சில சமயங்களில் குழந்தைகள் அசந்து தூங்கும் போது வாயைத் திறந்து கொண்டே தூங்குவதும் உண்டு.

மேம்போக்காக பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயமாக தோன்றும். ஆனால் குழந்தைகள் நல மருத்துவர்கள் அப்படி கூறுவதில்லை. குழந்தைகள் வாயைத் திறந்து தூங்குவது சில பிரச்சனைகளின் எதிரொலி. இதை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தூங்கும் போது மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய்வழியாக சுவாசிக்கிறார்கள். இது அவர்களின் மேல் சுவாச பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி வாயைத் திறந்து தூங்குவதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சில சிக்கல்களை அனுபவிக்க கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தைகள் வாயைத் திறந்து தூங்குவதற்கு என்ன அர்த்தம்?

குழந்தைகள் எப்போதும் மூக்கின் வழியாகத் தான் சுவாசிக்கிறார்கள். ஆனால் 3-4 மாதமுடைய குழந்தைகள் தூங்கும் போது மூக்கிற்கு பதிலாக வாய்வழி சுவாசத்தை மேற்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் வாய்வழியாக சுவாசிக்க ஒரே காரணம் அவர்களின் நாசி பாதை தடைபட்டு இருப்பதே ஆகும். இது உங்க குழந்தையின் மேல் சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பதை காட்டுகிறது. இது ஒரு சில ஒவ்வாமை தொற்றால் ஏற்படலாம்.

இதை அப்படியே விடும் போது இன்னும் சில சிக்கலான நிலைக்கு இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. வாய் வழியாக சுவாசிப்பது உங்க குழந்தைக்கு என்றும் பலனளிக்காது. ஏனெனில் வாய்வழியாக சுவாசிக்கும் போது உங்க உடலுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கும். அதே மாதிரி உங்க மூக்கு தான் பாக்டீரியா மற்றும் காற்றில் இருக்கும் தூசி மாசுக்களை வடிகட்ட உதவும். இதுவே நீங்கள் வாய்வழியாக சுவாசித்தால் இந்த செயல்கள் எல்லாம் நடக்காது.

குழந்தைகள் வாய்வழியாக சுவாசிக்க காரணங்கள்:

சளி

உங்க குழந்தையின் மூக்கு சளியால் தடைபட்டு போய் இருந்தால் அவர்கள் வாய்வழி சுவாசத்தை மேற்கொள்வார்கள். சளிப் பிரச்சினை காய்ச்சல் மற்றும் சில ஒவ்வாமை பிரச்சினைகளால் ஏற்படலாம். எனவே நீங்கள் முதலில் குழந்தையின் சளிக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

ஸ்லீப் அப்னியா

இது ஸ்லீப் அப்னியாவின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அவர்களின் மேல் காற்றுப்பாதை டான்சில்ஸ் மற்றும் அடினாய்டுகளால் தடைபட்டு இருக்கலாம். தூக்க மூச்சுத்திணறலின் பிற அறிகுறிகள் குறட்டை, அமைதியின்மை மற்றும் சுவாசிக்கும் போது இடைநிறுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

பிறழ்வான சுவாசச்சுவர்

உங்கள் குழந்தையின் நாசியைப் பிரிக்கும் குருத்தெலும்புகளில் உள்ள அசாதாரணத்தால் இது ஏற்படலாம். இதனால் மூக்கு வழியாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகலாம். இந்த பிரச்சினை பொதுவாக குறுகிய மேல்தாடை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்

சில நேரங்களில் குழந்தைகள் வாய்வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். நீடித்த நோய்க்கு பிறகு இந்த பிரச்சனையை அவர்கள் அனுபவிக்கலாம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

குழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா

Anu

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வரு‌ம் மச‌க்கை‌க்கு ச‌ரியான மரு‌ந்து !

Anu

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்?

Anu