உலக நடப்புகள்

முச்சக்கர வண்டி உட்பட தனியார் வாகனங்களுக்கு அனுமதி

தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பணிப்புரியும் நபர்களை ஏற்றிச் செல்ல முச்சக்கர வண்டி உட்பட தனியார் வாகன உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நிறுவனங்களில் பணிப்புரியும் நபர்களை அழைத்துச் சென்று திரும்பும் தனியார் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார்.

அத்துடன் இந்த தனியார் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக ஊரடங்குச் சட்டத்தை மீறிய சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தனியார் வாகனங்கள் சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கான ஊழியர்களை ஏற்றிச் செல்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இறக்குமதி வரி அதிகரிப்பு இன்று (22) முதல்…….

Anu

கொடிகாமத்தில் நடந்த கோர விபத்து..!! மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!!

Anu

உலக நாடுகளுக்கு பெரும் சவால்! வட கொரிய அதிபர் எடுத்துள்ள முடிவு…. கைதட்டி வரவேற்ற அதிகாரிகள்

Anu