தாய்மை-குழந்தை நலன்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வரு‌ம் மச‌க்கை‌க்கு ச‌ரியான மரு‌ந்து !

கர்ப்பகாலத்தில் இளம் தாய்மார்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு. கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்புடன், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் சரியாவதுடன் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால்வீக்கம் தடுக்கப்படுகிறது

சீரகம், சோம்பு ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும். பசியை தூண்டும். கருவுற்ற பெண்களுக்கு குமட்டல், பசியின்மை, மயக்கம், தலைச்சுற்றல், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக காலை முதல் மதியம் வரை இது இருக்கும். ஆலுபகோடாவை பயன்படுத்தி வாந்தி, குமட்டலை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். ஆலுபகோடா புளியம் பழம் போன்று இருக்கும்.

இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை உடையது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர குமட்டல், வாந்தி வருவது தடுக்கப்படும். வைட்டமின் சி சத்துள்ள ஆலுபகோடா பழம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பல்வேறு சத்துக்களை கொண்ட ஆலுபகோடா பழம் வாந்தியை தடுப்பதுடன், உடலுக்கு பலம் கொடுக்கும். தாய்மார்களுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.

இஞ்சியை பயன்படுத்தி குமட்டல், வாந்தியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி, பனங்கற்கண்டு. இஞ்சி துருவலுடன் பனங்கற்கண்டு கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். பாகு பதத்தில் கிடைக்கும் இதை ஆறவைக்கும்போது கெட்டியாக மாறும். இதை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாந்தி, குமட்டலின் போது சிறிய நெல்லிக்காய் அளவு சாப்பிடும்போது அவைகள் சரியாகும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இஞ்சி, பசியை தூண்டக் கூடியது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பசியின்மை, தலைசுற்றலை சரிசெய்கிறது. வெள்ளரியை பயன்படுத்தி வாந்தியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரி, புதினா, உப்பு, மிளகுப்பொடி.50 மில்லி வெள்ளரி ஜூஸ் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் புதினா சாறு, சிறிது உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து நீர்விட்டு கலந்து குடித்துவர வாந்தி, குமட்டல் இருக்காது. வாயு பிரச்னை சரியாகும். பசியை தூண்டும்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வரு‌ம் மச‌க்கை‌க்கு ச‌ரியான மரு‌ந்து தயாராக உ‌ள்ளது. அது எ‌ன்ன எ‌ன்று கே‌ட்பவ‌ர்களு‌க்கு உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டிலேயே இரு‌க்கு‌ம் ‌சீரக‌ம்தா‌ன் அது எ‌ன்று கூ‌றினா‌ல் ‌மிக‌ச் ச‌ரியாக இரு‌க்கு‌ம்.

மச‌க்கை எ‌ன்பது தலை சு‌ற்ற‌ல், மயக்கம், குமட்டல், வாந்தி என பல பிரச்னைகளை ஏ‌ற்படு‌த்து‌ம். இதனை தடுக்க எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது.

அதாவது, க‌ர்‌‌ப்பி‌ணிக‌ள் ‌தினமு‌ம் அரை தே‌க்கர‌ண்டி ‌சீரக‌த்தை பொடியா‌க்‌கி பா‌‌லில கல‌ந்தோ அ‌ல்லது தேனி‌ல் கலந்தோ குடித்து வர வே‌ண்டு‌ம். இ‌வ்வாறு செ‌ய்து வ‌ந்தா‌ல் மச‌‌க்கை‌யி‌ன் ‌வீ‌ரிய‌‌ம் குறையு‌ம்.

இது மச‌க்கை‌க்கு ம‌ட்டும‌ல்‌ல, கரு‌வு‌க்கு‌ம் ந‌ல்லது. சு‌க‌ப் ‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ம், ‌தா‌ய்பா‌ல் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌ம் உறுதுணையாக இரு‌க்கு‌ம். குழ‌ந்தை‌க்கு‌ம் ச‌ரி, தா‌ய்‌க்கு‌ம் ச‌ரி வாயு‌‌க் கோளாறுக‌ள் இரு‌க்காது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்?

Anu

பிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..

Anu

குழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா

Anu