அறுசுவை

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்!

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு – 1/2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு… எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்‘
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பாகற்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றம் பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மற்றொரு அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, லேசாக கடைந்து கொள்ள வேண்டும். பின் அதனை வாணலியில் ஊற்றி, அத்துடன் உப்பு, புளிச்சாறு, நாட்டுச்சர்க்கரை, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் மீண்டும் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். பிறகு மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், பாகற்காய் தால் ரெடி!!!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வீட்டிலேயே கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் செய்யலாம் வாங்க

Anu

குழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழ பால்

Anu

வீட்டிலேயே செய்யலாம் தேங்காய் பன்

Anu