உலக நடப்புகள்

பொலன்னறுவையிலிருந்து யாழ் சென்றவருக்கு கொரோனா அறிகுறி!

பொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையிலிருந்து தொழில் நிமித்தம் யாழ் எழுவைதீவுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பணியில் ஈடுபட்டிருந்த நபரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சனிக்கிழமை யாழ் வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாக உள்ளது. அதுவரை இவருடன் தொடர்பிலிருந்தவர்களை சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.source – ibctamil.

Related posts

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

Anu

கடலில் இளைஞனின் சடலம் மீட்பு…

Anu

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

Anu