ஆரோக்கியம்

அடிக்கடி தொண்டை வலித்துக் கொண்டே இருக்கிறதா? அப்போ உஷாராக இருங்க

தொண்டையில் ஏற்படும் புண் பொதுவாக உணவை விழுங்கும்போது வலியை கொடுக்கும்.

இதுபோன்ற வலியை உணரும்போது நமக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்று தெரிந்தாலும், அது எந்த அளவு மோசமானது? மருந்து ஏதும் இல்லாமலே அது குணமாகுமா? இல்லை மருத்துவரை அணுகி அலோசனை பெற வேண்டுமா? இது போன்ற கேள்விகள் எழும்.

பொதுவான தொண்டைபுண் போலல்லாமல், ஸ்ட்ரீப் தொண்டை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus ) பாக்டீரியா (இது தொகுதி A ஸ்ட்ரீப் என்று அழைக்கபடுகிறது) என்னும் ஒரு கிருமி, தொண்டை மற்றும் தொண்டை சுற்றிய பகுதிகளில் தொற்றுவதால் ஏற்படுகின்றன.

இத்தொற்று மிக வேகமாக மருந்துகளுக்கு கட்டுப்படும். முக்கியமாக நாம் அறிந்துகொள்ள வேண்டியது அது வெறும் தொண்டைப்புண் தான அல்லது அழற்சியா என்பது, ஏனெனில் இவ்விரண்டுக்கும் சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன.

தொண்டை புண் வேதனைக்குரியதாக இருந்தாலும் வலியின் அளவானது அழற்சி வலியை விட குறைவாகும்.

இது தொண்டை அழற்சி போலல்லாமல் ஒரு வைரஸ் தொற்று ஆகும். எனவே இது நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாது எனவே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது மிகவும் சிறந்தது.

கீழ்க்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால் தொண்டை புண்ணுக்கும் மருத்துவரை காண வேண்டியது அவசியம் பற்றி பார்ப்போம்

  • ஒரு வாரத்திற்கு மேல் பாதிப்பு,மீண்டும் மீண்டும் தொண்டை புண் வருவது, இரண்டு வாரங்களுக்கு மேல் குரலில் கரகரப்பு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு அல்லது வேறு சில வகை பாதிப்புகள் மேற்கொண்டு இக்கட்டுரை தொண்டை புண் மற்றும் ஸ்ட்ரெப் தொண்டை பதிப்பை வேறுபடுத்தி கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி புரியும்.
  • தொண்டை அழற்சி பொதுவாக கீழ் கண்ட சில கண்ணுக்கு புலப்படும் அறிகுறிகளுடன் காணப்படும்.தொண்டை மற்றும் தொண்டை பகுதிகளை சுற்றி வெள்ளை திட்டுகள், மேல் வாய் பகுதியில் அடர் சிவப்பு நிற திட்டுகள்
  • தோல் சொறிச்சல் மேல் கூறியவாறு காணப்படும் வெள்ளை திட்டுக்களில் சீழ் காணப்படும்.
  • கூடுதலாக, சில நோயாளிகள் கழுத்தில் வீக்கம், மென்மையான நிணநீர் கட்டிகள் மற்றும் சில பேருக்கு 101-102 F வரை காய்ச்சல் ஆகியவை காணப்படலாம். இந்த அறிகுறிகள் குழந்தைகள் மட்டும் பெரியவர்களுக்கு பொதுவானதாகும்.
  • இவை தொண்டை அழற்சியின் அறிகுறிகள் என்றாலும் மருத்துவரை அணுகி உருதி செய்து கொள்வது நல்லது ஏனெனில் கண்ணுக்கு புலப்படும் அறிகுறிகளை மட்டும் கொண்டு இந்த பாதிப்பை உறுதிபடுத்த முடியாது.
  • ½ தேக்கரண்டி உப்பை 1 கப் மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு பல முறை வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
  • இது சளியை இலக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள திரவத்தை வெளியேற்றி விடும்.
  • மருந்து கடைகளில் கிடைக்கும் சர்க்கரை மற்றும் உப்பு கலந்த மிட்டாய்களை சாப்பிடுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெற்று விடலாம்.
  • சில தொண்டை தெளிப்பான் மருந்துகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிப்பதன் மூலம் அந்த இடத்தை உணர்சியிழக்க செய்வதன் மூலம் வழியில் இருந்து நிவாரணம் பெற்று விடலாம்.
  • வெதுவெதுப்பான தேயிலை நீர் அருந்துவது (அ) தேன் குடிப்பது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் எரிச்சலை குறைக்கும் இம்முறைகள் எல்லாம் பதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்பதத்துடன் வைத்து நிவாரணத்தை கொடுக்கும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்?

Anu

Applis De Rencontre Gratuites Qui Marchent Bien En Pologne

அலர்ஜியை உருவாக்கும் உணவுப்பொருட்கள்?

Anu