ஆன்மீகம்

ஜூலை மாத ராசி பலன் 2020

மேஷ ராசி ஜூலை மாத பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் மேற் கொள்ளும் அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதமாக இது அமையும். உங்களில் சிலருக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை குறையக் கூடும். சில நேரங்களில் உங்கள் மனதில் குழப்பமும் நிறைந்து காணப்படும். உடன் பிறப்புகளுடன் பழகும் பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எனவே, பொதுவாக இப்பொழுது, உங்களது நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் தேவை. எனினும், பணப்புழக்கம் தாராளமாக இருக்கக் கூடும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையிலான உறவும் இனிமை தருவதாக அமையும். குறிப்பாக, பெண்கள் மூலம் இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியும், பல லாபங்களும் கிட்டும் வாய்ப்புள்ளது.

தொழிலில், உங்கள் கனவுகளையும், குறிக்கோள்களையும் அடைய மிகவும் கடினமாக முயற்சி செய்வீர்கள். இது, உங்கள் துறையில் நீங்கள் நல்ல லாபங்களை ஈட்ட உதவும். அதே நேரம், அரசாங்கத்துடன் தொடர்புடைய பணிகள் சிறப்பாக செயல்படக் கூடும். பொதுவாக உங்கள் வாழ்க்கை பல வகையிலும் சுமுகமாகவே நடைபெறும். உங்களில் சிலர், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளும் வாய்ப்புள்ளது. உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

ரிஷபம் ராசி ஜூலை மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, இது, அதிர்ஷ்டங்கள் தரும் மாதம் எனலாம். தொழில் லாபகரமாக நடக்கும். முன்னோர்களின் சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடும். குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்பார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தந்தையின் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்கள் மதிப்பும், கௌரவமும் அதிகரிக்கும். உங்களில் சிலருக்கு, ஏதோ ஒரு வகையில், இப்போது அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பும் உள்ளது. உங்கள் வருமானம் சுமாராக இருக்கும். இந்த நிலையில், வெளியிடங்களுக்குப் பயணம் செய்ய அதிக பணம் செலவு செய்ய நேரிடும்.

வேலையிலும் சில தடைகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் இவை தற்காலிகத் தடைகளாகவே இருக்கும். உங்களின் சில செயல்கள் காரணமாக, இப்பொழுது நீங்கள் சிலரை விரோதித்துக் கொள்ள நேரலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்ப வாழ்க்கையிலும் அமைதி கெட வாய்ப்புள்ளது. ஆகவே, தேவையற்ற பேச்சுக்களை நீங்கள் தவிர்த்து விடுவது நல்லது. சிறிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க.

மிதுனம் ராசி ஜூலை மாத பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இது, ஒரு சிக்கலான மாதமாக இருக்கக் கூடும். பண விஷயங்கள், மற்றவர்களுடன் கசப்பான உணர்வுகளுக்கு வழி வகுக்கக் கூடும். நீங்கள் பல நேரங்களில், மிகவும் குழப்பமாக இருக்கலாம். உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் அதிக தெளிவும் இல்லாமல் போகலாம். இந்த நிலை, வேலை மற்றும் தொழிலில், உங்கள் செயல்திறனை பாதிக்கக் கூடும். நீங்கள் பலவீனத்தாலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் உடல் மற்றும் மன நிலை இரண்டிலும் சிறப்பு கவனம் தேவை.

இப்பொழுது செலவுகளும் அதிகரிக்கக்கூடும். இவை முக்கியமாக, குழந்தைகளின் காரணமாக இருக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் சரி, நீங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். எதிரிகளிடமிருந்தும் சில சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளக் கூடும். எனினும், இது போன்ற பிரச்சினைகளை எல்லாம், உங்களால் நன்றாக சமாளிக்க இயலும். உங்கள் முயற்சிகளின் மூலம், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான புரிதல்களையும் நீங்கள் அகற்ற முடியும். உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க.

சிம்மம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

சிம்ம ராசி அன்பர்களே! இது உங்களுக்கு நன்மை பயக்கும் மாதமாக அமையும். பணியில் இருப்பவர்கள் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் முயற்சிகளும் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். எதிர்காலத்தில் நன்மை பயப்பதாகவும் திகழும். வேலை மற்றும் தொழிலில் பல இலாபகரமான வாய்ப்புகளையும், இப்பொழுது நீங்கள் பெறலாம். ஆனால், சில நேரங்களில் பணியிடச் சூழல் உங்கள் பொறுமையை சோதிக்கக்கூடும். ஆயினும், நம்பிக்கையை இழக்காமல், நீங்கள் கடினமாக உழைத்தால், அதிக உற்பத்தித் திறனை அடைய இயலும்.

குடும்ப விஷயங்களைப் பொறுமையுடன் கையாள்வது நல்லது. இளைய உடன்பிறப்புகளின் காரணமாக, நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரலாம். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

கடகம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், பொருளாதார ரீதியாக பல நற்பலன்களை அளிப்பதாக அமையக் கூடும். ஆனால், அத்துடன் கூட, சில சோதனைகளையும் இது அளிக்கக் கூடும். குடும்ப வாழ்க்கையில் சில தவறான புரிதல்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, பணியில் ஆழ்ந்த கவனம் தேவைப்படும். பொதுவாகவே, உங்கள் தொழிலிலும் எச்சரிக்கை தேவை. பணிச்சுமையும் அதிகமாக இருக்கலாம்.

இதனால், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்க இயலாமல் போகலாம். இதன் விளைவாக, சில ஆரோக்கியப் பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படலாம். இவை செலவுகளுக்கும் வழிவகுக்கலாம். உங்களில் சிலர், சிறு பயணங்களை மெற்கொண்டு, இவை தொடர்பாக செலவுகளையும் செய்ய நேரிடலாம். ஆனால் இது போன்ற எந்த சவாலையும், இப்பொழுது நீங்கள் நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சமாளிப்பீர்கள்.

கன்னி ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், நல்லவை மற்றும் அல்லாதவை என இரண்டு வகைப் பலன்களும் கலந்து கிடைக்கக் கூடும். உங்கள் வருமானம் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் மூலம் லாபம் வந்து சேரும். உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும். தந்தையின் உடல் நிலையும் சீராக இருக்கும். எனினும், தாய் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். தொழில் வழக்கம் போல் தொடரும். எனினும், அங்கு லாபம் பெறுவதில் தடைகள் ஏற்படலாம்.

பணியில் இருப்பவர்களில் ஒரு சிலருக்கு, வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்பொழுது சிலர், குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. சிலர் வாகனங்களையும் வாங்கக் கூடும். எனினும், திருமண வாழ்க்கையில் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். பொது வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும்

துலாம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களே! பொதுவாக இந்த மாதம் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பணி புரிபவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் முனைவோர், அவர்களது கடின உழைப்பு மற்றும் இடைவிடாத தொடர் முயற்சிகளின் பயனாக லாபம் ஈட்டுவார்கள். ஆனால் தொழிலில் குறுகிய காலத்திற்கு, சற்றே மந்த நிலை நிலவும் வாய்ப்பும் உள்ளது. உங்களில் சிலருக்கு தாயின் மூலம் ஆதாயம் கிட்டலாம். இளைய உடன் பிறப்புகளிடமிருந்தும் நீங்கள் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

தந்தையின் ஆரோக்கியமும் இந்த நேரத்தில் மேம்படக்கூடும். ஆனால் காதல் விவகாரங்களை கவனமாக கையாள வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையேயான பிணைப்பும் சீராக இல்லாமல் போகலாம். சில குடும்ப உறுப்பினர்கள் அல்லது மற்ற உறவினர்களுடன் நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே, எச்சரிக்கை தேவை. இருப்பினும், உங்களில் சிலரை நோக்கி, அதிர்ஷ்டக் காற்றும் வீசக் கூடும்.

விருச்சிகம் ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இது, ஏற்ற இறக்கங்களும், கலவையான பலன்களும் நிறைந்த மாதமாக அமையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை அல்லது தொழில் இரண்டுமே சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணியில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். வியாபாரத்தில் இலாபங்கள் பாதிக்கப்படலாம் அல்லது தாமதமாகலாம். குடும்பத்திலும் பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் காரணமாகவும் நீங்கள் செலவுகளை சந்திக்க நேரலாம்.

எனவே, இந்தக் காலகட்டத்தில் நீங்கள் திடமாக நின்று மிகவும் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் விரும்பினால், நிலைமையை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள உங்களால் இயலும். மேலும், இந்த கடினமான அனுபவங்கள் உங்களுக்குத் தைரியத்தையும், உறுதியான மனநிலையையும் அளிக்கும். எனவே, நம்பிக்கையுடன் செயல்படுங்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் சிலருக்கு, இப்பொழுது திருமணம் கை கூடி வரும் வாய்ப்புள்ளது.

மகர ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

மகர ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், சில பிரச்சனைகள் அல்லது கவலைகள் தொந்தரவு கொடுக்கலாம். ஒரு சிலர் தலைவலி மற்றும் குழப்பங்களால் கூட பாதிக்கப்படலாம். இளைய உடன்பிறப்புகள் உங்கள் மனதில் சில கசப்பான உணர்வுகள் எழக் காரணமாக இருக்கக் கூடும். மேலும், சில வீண் செலவுகள் அல்லது இழப்புகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். சிறு வியாதிகளாலும் நீங்கள் பாதிக்கப்படலாம். அதே நேரம், தாயின் உடல் நிலையிலும் கவனம் தேவைப்படலாம். நிலங்கள் அல்லது வாகனங்கள் சம்பந்தமான வழக்குகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தொழில் நடவடிக்கைகளில், இப்பொழுது நீங்கள் கவனமாக இருப்பதும் அவசியம். இருப்பினும், அதில் நீங்கள் லாபம் ஈட்ட முடியும். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். அதே நேரம், குழந்தைகளுக்கும் சில நன்மைகள் விளையும். நீங்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். உங்களில் சிலர் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.

தனுசு ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு, நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் கிடைக்கும் எனலாம். பணப்புழக்கம் சரளமாக இல்லாமல் போகலாம். காதல் உறவையும் கவனமாகக் கையாளுதல் வேண்டும். இளைய உடன்பிறப்புகளின் காரணமாக பிரச்சினைகள் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் தொழில் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் வழக்கமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கூட நீங்கள் காட்டும் தீவிர ஈடுபாடு மற்றவர்களைக் கவரும். உங்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை, அவர்களிடமும் ஏற்படுத்தும். இப்பொழுது உங்கள் மறைமுக எதிரிகளைக் கூட நீங்கள் வென்று, அவர்களையும் உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ள முடியும்.

உங்களில் சிலர் பணி தொடர்பான சுற்றுப் பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்னும் சிலருக்கு, ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கையில் நீங்கள் அதிக மகிழ்ச்சி காணவும் இது சரியான நேரமாகும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

கும்ப ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம், உங்கள் நிதி மற்றும் வேலை, தொழில் நிலை வலுவாக இருப்பதைக் காணலாம். தாயின் தரப்பிலிருந்து நீங்கள் சில ஆதாயங்களைப் பெறலாம். சிலர் வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. எனினும், காதல் விவகாரங்களில் சில தடைகள் உருவாகலாம். அதே நேரம், உங்கள் காதல் உறவு, வெற்றிகரமாக, திருமணத்தில் முடியும் வாய்ப்பும் உள்ளது. திருமணமானவர்கள் குழந்தைப் பேற்றிற்கான பாக்கியம் பெறலாம். எனினும், தந்தையின் உடல்நிலை உங்கள் மனதில் கவலையை ஏற்படுத்தக்கூடும்.

பணியில் இருப்பவர்கள், மிதமான அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். தொலைதூர நாடுகளிலிருந்து சிலருக்கு அழைப்புகள் வரலாம். இந்த அழைப்புகளை ஏற்று, சிலர் தொலைதூரப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். இந்த நேரத்தில், செலவுகள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரலாம். இப்பொழுது சிலர், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொழில் நடவடிக்கைகளில், நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்களில் சிலர், ஆலயங்களுக்குப் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது.

மீன ராசி ஜூலை மாத பொதுப் பலன்கள்:

மீன ராசி அன்பர்களுக்கு, இது, பெயர், புகழ், மரியாதை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் மாதமாக அமையும். உங்கள் எல்லாப் பணிகளையும், நீங்கள் தைரியத்துடன் மேற்கொள்வீர்கள். தொழிலில் உங்கள் தகுதியை நிரூபிக்கவும், இது சரியான நேரமாக இருக்கும். சிலர் ஊதிய உயர்வு பெறுவீர்கள். இது உங்களுக்கு மனநிறைவை அளிக்கும். சமூகத்தில் புதிய தொடர்புகளையும் நீங்கள் எற்படுத்திக் கொள்ளலாம். உங்களில் சிலர் சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

இருப்பினும், ஆரோக்கியத்தை அவ்வாறே பராமரிக்க, நீங்கள் கண்டிப்பான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். சில நேரங்களில், உங்களுக்குப் பதட்டமான மனநிலை உருவாகலாம். எனவே, எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், நன்கு சிந்தித்துச் செயல்படுங்கள். குடும்பத்தில் சற்றே தவறான புரிதல்கள் சில உருவாகக் கூடும். ஆனால் இவை தற்காலிகமானதாகவே இருக்கும். இருப்பினும், உடன் பிறந்தவர்களுடன் நீங்கள், நேசத்துடன் பழகுவீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம் தெரியுமா?

Anu

இன்றைய ராசிபலன் 2020-05-23

Anu

இன்றைய ராசிபலன் 2020-06-05

Anu