ஆரோக்கியம்

வாழ்க்கைத் தத்துவங்கள் – பொன்மொழிகள், வாசியுங்கள் பகிருங்கள்…

1. சிறந்தவனாக இரு, சிறந்ததைவைத்திரு, சிறந்ததை செய்.

2. ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.

3. போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன்உனக்காக. இப்படிக்கு – வாழ்க்கை.

4. வாழ்க்கை தரும் பாடம்

ü எதுவும் சில காலம்தான்.

ü எதிர்ப்பார்ப்பை குறைத்துகொண்டால் ஏமாற்றம்ஒன்றும் பெரிதாகஇருக்காது.

ü நம்பு, யாரையும் முழுமையாகநம்பாதே. உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.

ü சிந்தனை செய், கோபப்படாதே.

ü வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.

5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல,நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.

6. அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றைஆயிரம் தத்துவ ஞானிகளாலும்உணரவைக்க முடியாது.

7. உன் மனம் ஒன்றே உன்னைவீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அதுதெளிவாக இருக்கும் வரையில் நீஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.

8. உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய்தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை.கண்ணில் பிழை என்றால் பிம்பமும்பிழையே. அது பார்க்கப்படுபவன்பிழையல்ல, பார்ப்பவன் பிழை.

9. யாரை நீ வெறுத்தாலும் உன்னைமட்டுமாவது நேசிக்க கற்றுக்கொ
ள்.ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிகசிறந்த காதல் உன்னை நீநேசிப்பதுதான்.

10. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டுபேச துணை இல்லாதபோது தான்தெரியும், உண்மையான் அன்பின்பெருமை.

11. மௌனத்தில் வார்த்தைகளையும்,கோபத்தில் அன்பையும்உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல்இருந்தால் பிரிதல் இல்லை.

1ங்கள் புன்னகையில் உள்ளசோகத்தையும், கோபத்தில் உள்ளகாதலையும், மௌனத்தில் உள்ளகாரணத்தையும் யார்புரிந்துகொள்கிறார்களோ அவர்களேஉங்கள் அன்புக்கு உரிமை உடையவர்.

13. உரிமை இல்லாத உறவும், உண்மைஇல்லாத அன்பும், நேர்மை இல்லாதநட்பும், நம்பிக்கை இல்லாதவாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.

14. இழக்கும் வரை ஒருவரின் அருமைநமக்குப் புரிவதில்லை.

15. ஒருவரின் அருமையை அவர்களைபிரியும் தருணத்தில் மட்டுமே உணரமுடியும், நினைவுகளின் துணையோடு.

16. ஒருவரை இழக்கும் போது வரும்கண்ணீரைவிட, அவர்களைஇழக்கக்கூடாது என்றுநினைக்கும்போது வரும் கண்ணீருக்குஇன்னும் வலி அதிகம்.

17. எதுவுமே உயர்ந்தது இரண்டு முறை, கிடைப்பதற்கு முன்பு தவறவிட்ட பின்பு.

18. தனிமை கொஞ்சம் வித்தியாசமானது.நாமே அதை எடுத்துக்கொண்டால் அதுஇனிக்கும், மற்றவர்கள் நமக்கு அதைகொடுத்தால் கசக்கும்.

19. எல்லோருடைய இதயத்திலும் காயங்கள்உண்டு. அதை வெளிப்படுத்தும்விதம்தான் வித்தியாசம். சிலர்கண்ணீராக, சிலர் புன்னகையாக.

20. ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது.அதை முட்டாள்கள் கண்களிலும்,அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.

21. உங்கள் எண்ணங்கள் எப்படியோஅப்படித்தான் வாழ்க்கையும் அமையும்.எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

22. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம்விரும்புகிறது, அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது, அதிகம்செயல்படுபவனையே கைகூப்பித்தொழுகிறது.

23. உங்கள் எண்ணம் பண்பட்டு இருந்தால்உங்களுக்கு கெட்ட எண்ணங்களேதோன்றாது. இதனால் உங்கள்சொல்லும், செயலும் தன்னாலேயேபண்பட்டுவிடும். இதனால் உங்கள்எண்ணங்களின் மேல் அதிக கவனம்செலுத்தவேண்டியதுஇன்றியமையாதது.

24. நமது சொல் அல்லது செயலுக்குமூலகாரணியாக இருப்பது நம்எண்ணமே. நாம் எதையும் சொல்லும்முன்போ அல்லது எதையும் செய்யும்முன்போ அதற்கான உந்துதல் முதலில்நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

25. உருவத்தில் எப்படி இருந்தாலும்உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்தஉலகமே உன்னை நேசிக்கும்.

26. எல்லாக் காயங்களுக்கும் ஒரு மருந்து,குழந்தைகளின் புன்னகை என்னும்அருமருந்து.

27. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டுமருந்துகள் உள்ளன. ஒன்று காலம்,இன்னொன்று மௌனம்.

28. நீ சிரித்து பார் உன் முகம் உனக்குபிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

29. நட்பையும் மகிழ்ச்சியையும்இரட்டிப்பாக்க அருகிலிருப்பவர்களுக்குகொடுத்துவிடுங்கள்.

30. தவறு செய்வது மனித இயல்பு.

நாம் ஒரு தவறை செய்யும்போது,

ü அதைநியாயப்படுத்தக்கூடாது.

ü அதை மறுக்கக்கூடாது.

ü பிறரைக் குற்றம்சாட்டக்கூடாது.

ü அதை மீண்டும்செய்யக்கூடாது.

பிறகு என்னதான்செய்யவேண்டும்,

ü ஒப்புக்கொள்ளுங்கள்.

ü மன்னிப்புக் கோருங்கள்.

ü கற்றுக் கொள்ளுங்கள்.

31. தவறே செய்யாத மனிதன் இல்லை,தவறை திருத்திக் கொள்ளாதவன்மனிதனே இல்லை.

32. வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பைகேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம்கற்றுக்கொண்டால்.

33. மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச்சிறந்த வக்கீலாகவும், பிறர் செய்ததவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும்இருக்க விரும்புகிறான்.

34. அறிவாளிகளுக்கு அறிவு அதிகம்,ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம்அதிகம்.

35. தலைகுனிந்து என்னைப் பார், தலைநிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன். -புத்தகம்.

36. அழும்போது தனிமையில் அழு,சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி;கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,தனிமையில் சிரித்தால் பைத்தியம்என்பார்கள்.

37. நல்லவனாய் இரு. ஆனால் அதைநிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விடமுட்டாள்தனமான விஷயம்எதுவுமில்லை.

38. வாழ்க்கையில் யாரையும் சார்ந்துவாழ்ந்து விடாதே. உன் நிழல்கூடவெளிச்சம் உள்ளவரை தான் துணைக்குவரும்.

39. அனைவரையும் நேசி, சிலரை மட்டும்நம்பு, ஒருவரை பின்பற்று, ஆனால்ஒவ்வொருவரிடம் இருந்து கற்றுக்கொள்.

40. இருளைத் தூற்றுவதற்குப் பதில் அகலைஏற்றுங்கள்.

41. வீரனைப் போரிலும், யோக்கியனைகடனிலும், மனைவியை வறுமையிலும்,நண்பனை கஷ்டகாலத்திலும்அறிந்துகொள்ளலாம்.

42. பழைமைப் பற்றி ஒன்றுமே தெரியாமல்புதுமையைச் சிறப்பாகப் படைக்கமுடியாது.

43. வாழப் பொருள் வேண்டும், வாழ்வதிலும்பொருள் வேண்டும்.

44. பணத்தின் உண்மையான மதிப்புபிறரிடம் கடன் கேட்கும்போதுதான்தெரியும்.

45. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரமாகசெல்வந்தனாவான்.

46. கீழே விழாமல் இருப்பதுபெருமையில்லை, விழுந்தபொழுதெல்லாம் எழுந்திருப்பதேபெருமை.

47. என்னிடம் 6 நாணயமான நண்பர்கள்இருக்கின்றனர், அவர்கள்தான் எனக்குஎல்லாம் கற்றுத் தருகின்றனர்.அவர்களுடைய பெயர்கள் – எங்கே?என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?

48. இதயத்தால் காதல் கொள், கண்களால்அல்ல.

49. எங்கே வாழ்க்கை தொடங்கும், அதுஎங்கே எவ்விதம் முடியும், இதுதான்பாதை இதுதான் பயணம் என்பதுயாருக்கும் தெரியாது. பாதையெல்லாம்மாறிவரும், பயணம் முடிந்துவிடும்,மாறுவதைப் புரிந்து கொண்டால்மயக்கம் தெளிந்துவிடும்.

50. உன்னை அறிந்தால், நீ உன்னைஅறிந்தால் உலகத்தில் போராடலாம்.உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலைவணங்காமல் நீ வாழலாம்.

51. துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியைஇழக்காதே, காதலே நினைத்துவாழ்க்கையை இழக்காதே,சோதனையை நினைத்து சாதனையைஇழக்காதே, தோல்வியை நினைத்துவெற்றியை இழக்காதே.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சர்க்கரையை குணமாக்கும் நித்திய கல்யாணி!

Anu

கொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் படபடனு அடிக்குதா.!? மூச்சி வாங்குதா !? காரணம் இது தான்..இதோ உடனடி தீர்வு..!!

Anu

உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா?

Anu