உலக நடப்புகள்

கடலில் இளைஞனின் சடலம் மீட்பு…

பாசையூர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞன் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் இரண்டாம் குறுக்குத்தெரு பாசையூர் கிழக்கைச்சேர்ந்த சில்வெஸ்ரர் டல்சன் சயித் வயது 26 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாசையூர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக ஒரு படகில் மூன்று பேர் சென்றுள்ளனர். கடலில் இறங்கி மீன்வலைகளை வீசிக்கொண்டிருந்தபோது உயிரிழந்த குறித்த இளைஞனைக் காணவில்லை என்று மீன்பிடிப்பதற்கு கூடச்சென்றவர்கள் தேடியுள்ளனர்.

எனினும், இளைஞன் வேறு நபர்களுடன் கரைக்குத் திரும்பியிருக்கலாம் என நினைத்து கூடச்சென்றவர்கள் கரைதிரும்பியுள்ளனர்.

அவ்வாறு கரை திரும்பியவர்கள் இளைஞனைத் தேடியபோதும் கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் நடத்திய தேடுதலில் அவ் இளைஞன் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வானில் நிகழவுள்ள அதிசயம் – மக்களே வெற்றுக் கண்களால் பார்க்கலாம்

Anu

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

Anu

குடத்தனையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை -தேடப்பட்ட மூவரில் ஒருவர் சிக்கினார்

Anu