உலக நடப்புகள்

ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம், இது தான் காரணம்

அமெரிக்காவில் மரணமடைந்த கறுப்பினத்தவருக்கு ஆதரவாக நீடிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தந்தை மகளின் புகைப்படம் தற்போது ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை தாம் பதிவு செய்த புகைப்படங்களில் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் இது என அந்த புகைப்படத்தை பதிவு செய்தவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று லாங் பீச், கலிபோர்னியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இந்த புகைப்படத்தை Richard Grant என்பவர் பதிவு செய்துள்ளார்.

ஒரு தந்தை தமது இளம் வயது மகளை தமது தோளிலேற்றி அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அந்த தந்தையையும் மகளையும் ரப்பர் தோட்டாக்களுக்கான துப்பாக்கிகளுடன் ஒரு பொலிஸ் குழு சுற்றி வளைக்கிறது.

ஒற்றைப் பார்வையில் கதிகலங்க வைக்கும் இந்த புகைப்படமானது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல லட்சம் மக்களால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஒற்றைப் புகைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என தாம் எண்ணவில்லை எனவும், அந்த காட்சி தம்மை உலுக்கியதாலேயே தாம் அதை பதிவு செய்ததாகவும் Richard Grant தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் இருப்பது போன்று பொலிசார், அந்த தந்தைக்கும் குழந்தைக்கும் நேரே துப்பாக்கியை நீட்டவில்லை என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதையே தாமும் நம்புவதாக கூறும் Richard Grant, தமது பார்வையில் பட்டதையே புகைப்படமாக பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பொலிசாரால் மரணமடைந்த ஜோர்ஜ் பிளாயிடுக்கு ஆதரவாக கலிபோர்னியாவில் மட்டுமே அதிக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டுமின்றி, லொஸ் ஏஞ்சல்ஸ், ஒக்லாண்ட், சான் பிரான்சிஸ்கோ, சேக்ரமெண்டோ மற்றும் சான் டியாகோ ஆகிய நகரங்களிலும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

யாழில் பெண்ணுக்குத் தொலைபேசியில் பாலியல் தொல்லை! இளைஞர்களுக்கு நடந்த கதி!! (படங்கள்)

Anu

யாழில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு!

Anu

குமரன் பத்மநாதனை அழைத்து வருவதில் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி! தண்டிக்கப்படாததன் பின்னணி என்ன?

Anu