அறுசுவை

சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல்

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 50 கிராம்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 12,
கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.

பின்னர் அதில் உறித்த சின்ன வெங்காயம்,  புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.

மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

சத்தான சுவையான சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் ரெடி.

குறிப்பு:     சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்!

Anu

வீட்டிலேயே செய்யலாம் தேங்காய் பன்

Anu

குழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழ பால்

Anu