உலக நடப்புகள்

அதிகாரிகளால் மூடப்பட்டது சாவகச்சேரி பொது சந்தை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொது சந்தை சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் சந்தையில் அதிகளவானவர்கள் ஒன்று கூடியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சாவகச்சேரி பொது சந்தையில் இன்றைய தினம் அதிகளவான மக்கள் ஆலய திருவிழா போன்று ஒன்று கூடியிருந்தனர். இந்நிலையில் பரிசோதனைக்காக அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினரால் இது அவதானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் மக்களின் நலன் கருதி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு வைத்தியர்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த பொது சந்தையில், சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி எதுவும் பேணப்படாது மக்கள் மிகவும் செறிவாகவும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதும் செயற்பட்டதை அவதானித்த சுகாதாரப் பிரிவினர் சந்தையை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் இன்று மாலை தாம் கலந்தாலோசித்து பின்னரே முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வவுனியாவில் குழியில் வீழ்ந்து சிறுவன் பரிதாபமாக பலி! நேற்று பிறந்தநாள்

Anu

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும் – புது பீதியை கிளப்பும் லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள்

Anu

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கு கட்டுப்பாடுகள்!

Anu