தாய்மை-குழந்தை நலன்

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்?

1990ம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் தாத்தா பாட்டி இருந்திருப்பார்கள். அன்றைய பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் மிகுந்த பாசத்துடன் அரவணைப்புடன் வளர்த்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் தாத்தா பாட்டியுடன் வளர்ந்த நாட்களை இப்போது நினைத்தாலும் அது ஒரு நல்ல நினைவையும் உணர்வையும் தரும். தாத்தா பாட்டியுடன் வளரும் பேரப்பிள்ளைகள் ஒரு வித உணர்வு பூர்வமான சிந்தனையுடன் வளர்க்கப்படுகிறார்கள். அவ்வித குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக வளர்கிறார்கள்.

எந்த சூழலிலும் தன்னை இணைத்துக் கொள்வது, எதையும் பகிர்ந்து கொள்வது போன்ற குணநலன்கள் அவர்களுக்கு அமைந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்களுக்கு குடும்ப அமைப்பின் மீது ஒரு பற்றும், பெரியவர்கள் மேல் மரியாதையும் நிறைந்து காணப்படுகிறது.

நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்கள் பெற்றோருடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. அறிவியலின் படி, தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் தனியாக வளரும் குழந்தைகளில் இருந்து வேறுபடுகிறார்கள். தாத்தா பாட்டியுடன் பேரப்பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் 5 காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பிள்ளைகளை தாத்தா பாட்டி கவனித்துக் கொள்ளலாம். அவர்களை விட அதிக கவனமாக வேறு யாரும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாது. குழந்தையை வளர்ப்பது மட்டுமல்ல குழந்தையை பாதுகாக்கவும் அவர்கள் இருப்பார்கள். பெருகி வரும் பல சமுதாய பிரச்சனைகளில், குழந்தையை தனியாக வீட்டில் இருக்க வைக்க முடியாத நிலையில், வேறு யாரோ ஒருவரை நம்பி பிள்ளைகளை விடுவதற்கு மாற்றாக தாத்தா பாட்டியிடம் தாராளமாக விட்டுவிடலாம். அவர்களை விட சிறந்த பாதுகாப்பு குழந்தைகளுக்கு வேறு யாரும் இல்லை.

பிள்ளைகள் பல நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வார்கள்

தாத்தா பாட்டியுடன் நேரம் செலவிடும் போது பிள்ளைகள் தங்களுடைய குடும்ப வரலாறு பற்றி அறிந்து கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தின் மீது ஓட்டுதல் அதிகரிக்கிறது. மற்றும் பாசம், மரியாதை , சேவை போன்ற குணநலன்கள் அவர்களுக்கு உண்டாகிறது. இதனால் குழந்தைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. பிடிவாதம் தளர்கிறது. மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் அதிக சமர்த்தாக அதிக முதிர்ச்சியுடன் நடந்து கொள்கின்றனர். தங்கள் குடும்ப வரலாறு மற்றும் குடும்பத்தினர் கடந்து வந்த பாதை ஆகியவற்றைப் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்வதால் கஷ்டமான தருணங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்கின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

குழந்தைகள் வாயை திறந்து தூங்கினால் என்ன பிரச்சினையா இருக்கும்? அதை எப்படி சரிசெய்வது?

Anu

பிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..

Anu

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வரு‌ம் மச‌க்கை‌க்கு ச‌ரியான மரு‌ந்து !

Anu