ஆன்மீகம்

இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்…

மேஷம்

இந்த வாரம் ஆஃபீஸ் வேலை விஷயத்துல கவனமாக இருங்க. பேச்சில் கொஞ்சம் காரத்தை குறைங்க. ஆஃபீஸ்லயும் பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. உங்க சீனியர் கூட பேசும் போது கொஞ்சம் கவனமா பேசுறது நல்லது. தேவையில்லாத விஷயங்களை வேலை நேரத்துல பேசி டயத்தை வீணடிக்காதீங்க. அதே மாதிரி கூட வேலை பாக்குறவங்க கிட்டயும் சண்டை போடாதீங்க. உங்க மனசுல இருக்குற ஃபீலிங்சை உங்க ஒய்ஃப் கிட்ட சொல்றதுக்கு இது தான் சரியான தருணம். குடும்பத்துல இருக்குறவங்க ஆறுதலாவே இருப்பாங்க. இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலாவே இருக்கும். வேலையில சிலருக்கு புரமோசன் கிடைக்கலாம். உங்க ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். உங்க முயற்சிகள் எல்லாம் இந்த வாரம் சக்சஸ் ஆகும் சந்தோஷமா இருங்க. திடீர் உதவிகளும், அதிர்ஷ்டங்களும் உங்களை தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நாள் : ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்

இந்த வாரம் நீங்க ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்க காரணம் ஆரம்பத்திலேயே சின்னதா சிக்கல் எழ வாய்ப்பிருக்குது. உங்களுக்கு வேண்டாதவங்க தப்பான தகவலை கொடுத்து உங்களை குழப்புவாங்க கவனமாக இருங்க. கணவன் மனைவி வீண் பேச்சை தவிர்திடுங்க. ஆஃபீஸ்லயும் சில சிக்கல் வர வாய்ப்பிருக்குது. ரொம்ப டென்ஷனா ஃபீல் பண்ணினா, உங்க சீனியர் கிட்ட கண்ஷல்ட் பண்றது நல்லது. இந்த வாரம் முக்கியமான வேலைங்களை முடிக்க முயற்சி பண்ணுவீங்க. கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா நீங்க ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு. வார கடைசியில உங்க ஒய்ஃப் கூடவும் ரொம்பவே அந்நியோன்யமா இருப்பீங்க. கஷ்ட காலத்துலயும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்கும். பயணங்களால் அலைச்சல் வரலாம் கவனமாக இருங்க. ஆபிஸ்ல மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைப்பது ஆறுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நாள் : சனிக்கிழமை

மிதுனம்

இந்த வாரம் நீங்க ரொம்ப சறுசுறுப்பா இருப்பீங்க. உங்க ராசி நாதன் ஆட்சி பெற்று உங்க ராசியில சஞ்சரிக்கிறார். உங்களுக்கு நல்லா இருக்கும். ஆஃபீஸ்ல உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுப்பாங்க. சரியா ப்ளான் பண்ணி புத்திசாலித்தனமா வேலை செஞ்சீங்கன்னா, ப்ளான் பண்ணின மாதிரியே அந்த வேலையை சரியான நேரத்துல முடிச்சி, உங்க சீனியர் கிட்டயும் பாராட்டு வாங்குவீங்க. அவங்களும் உங்களை சப்போர்ட் பண்ணுவாரு. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும். லாங் டெர்ம் இண்வெஸ்ட்மெண்ட் பண்றதுக்கும் இந்த வாரம் அருமையா இருக்கும். பெர்சனல் லைஃப்ல சில சிக்கல் வர வாய்ப்பிருக்கு. வீட்டுல உங்க ஒய்ஃப் கிட்ட உங்க மனசுல இருக்குறதை அப்பிடியே கொட்டிடுங்க. அப்பதான் அவங்களைப் பத்தி நீங்க நினைக்கிறதை புரிஞ்சிக்குவாங்க. நோயாளிகள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷன்ல ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும் ஆரோக்கியம் நார்மலா இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நாள் : புதன் கிழமை

கடகம்

இந்த வாரம் உங்க குடும்பத்துலயும் அமைதியும் சந்தோஷமும் நிலைச்சி நிக்கும். உங்களோட பெர்சனல் மேட்டர்ல வெளியாளுங்களை தலையிட விடாதீங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்கும். ஏற்கனவே பண்ணியிருக்குற இன்வெஸ்ட்மென்ட்ல இருந்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. சிங்கிள்ஸ் இந்த வாரம் கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்ச காலம் வெய்ட் பண்றது நல்லது. வார மத்தியில நீங்க கொஞ்சம் டல்லா ஃபீல் பண்ணுவீங்க. அதனால வேலையிலும், பிசினஸிலும் ரொம்ப அக்கறை காட்டவேண்டிய நேரம். உங்க டேலண்ட்டை எல்லாருக்கும் நிரூபிக்க பாருங்க. அப்ப தான் அவங்க உங்களை நம்புவாங்க. ரொம்பவே டென்ஷனா இருந்தா யோகா, தியானம் பண்றது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில வேகமாக போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நாள் : செவ்வாய்க் கிழமை

சிம்மம்

இந்த வாரம் நீங்க எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களோட டேலண்ட்டை பாத்து மத்தவங்க பாராட்டுவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். உங்க ஃபைனான்ஸ் சம்பந்தமாக போடுற பிளானும் சக்ஸஸ்ஃபுல்லா முடியும். அதனால உங்க சந்தோஷம் அதிகமாகிடும். கல்யாணம் ஆன தம்பதிங்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும். உங்க ஒய்ஃப் உங்ககிட்ட இருந்து ஏதோ ஒரு கிஃப்ட் எதிர்பாக்குறாங்க போல மறக்காம வாங்கிக்குடுங்க. லவ் பண்றவங்க லவ்வரை மீட் பண்ணி பேசலாம். சோசியல் டிஸ்டென்ஸ் ரொம்ப அவசியம். அதிக நெருக்கம் ஆபத்தா போயிரும். அலுவலகத்தில இந்த வாரம் வேலைங்க நார்மலாவே இருக்கும். உங்களோட ஐடியாவை மத்தவங்க குறை சொன்னாலும் கூட, உங்களோட திறமையை மெச்சுவாங்க. கொடுத்த கடன்கள் வசூலாகும். பணம் கொடுக்கல் வாங்கல் நார்மலாக இருக்கும். சிங்கிள்ஸ் பலருக்கு வரன் அமைய வாய்ப்பு இருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நாள் : ஞாயிறுகிழமை

கன்னி

இந்த வாரம் உங்க தன்னம்பிக்கையும் டேலண்ட்டும் ஜாஸ்தியாகிடும். உங்களோட டேலண்ட்டும், எதையும் ஈஸியா புரிஞ்சிக்கிற பக்குவமும், கஷ்டமான சூழ்நிலையை ஈஸியா மாத்திடும். ரொம்ப நாளைக்கு பின்னாடி, வேலை வசதியாவும் பாதுகாப்பாவும் இருக்குற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. உங்க சீனியரும் உங்களை பாராட்டுவார். பிசினஸ் பண்றவங்க பிசினஸை டெவலப் பண்ணுவீங்க. உங்க குடும்ப உறுப்பினர்களோட தேவையை நிறைவேத்துறது ரொம்ப முக்கியம். அவங்களுக்கு உங்களோட அரவணைப்பும் ஆதரவும் தேவைப்படுது. பண விஷயத்தைப் பொருத்த வரைக்கும், செலவழிக்கிறதை விட சேமிச்சி வைக்கிறது தான் உங்களோட திறமை. அதனால பணத்தை சம்பாதிக்க பல சான்ஸஸ் இருக்கு. சில முக்கியமான வேலையை முடிக்க முடியாம சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க. படிக்கிற பசங்களுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும். தொழில் வியாபாரத்தில லாபம் கிடைக்கும். சிலருக்கு கவுரவ பதவிகள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமாக இருக்கும். திடீர் சுப செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

துலாம்

இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப நல்லா இருக்கும். ஹெல்த் கண்டிசன்ல கவனமாக இருங்க. உஷ்ணம் தொடர்பான நோய்கள் எட்டிப்பார்க்கலாம். புதுசா வியாபாரம் ஆரம்பிச்சீங்கன்னா, லாபம் அப்பிடியே ரெட்டிப்பாகிடும். யாருக்காவது கடன் கொடுத்திருந்தீங்கன்னா, அது இந்த வாரம் திரும்ப வந்திடும். சிலருக்கு வர கடைசியில கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளிலும் நீங்க ஜெயிக்க வாய்ப்பிருக்குது. வயசுல மூத்தவங்களும் உங்களை பாராட்டி என்கரேஜ் பண்ணுவாங்க. ஆஃபீஸ்லயும் உங்க வேலையை எல்லோரும் பாராட்டுவாங்க. பெர்சனல் லைஃப்லயும் சின்னதா ஒரு சேன்ஜ் இருக்கலாம். புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பிருக்குது. குழந்தை கன்பார்ம் ஆகலாம். 24ஆம் தேதி மாலை வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்கு ரொம்ப கவனமக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நாள் : திங்கள் கிழமை

விருச்சிகம்

இந்த வாரம் முழுக்க ரொம்ப பரபரப்பா இருப்பீங்க. சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். பிசினஸ் பண்றவங்க, ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, புது ஆர்டர் கிடைக்கவும் வாய்ப்பிருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க, வேலையை பெண்டிங்க வைக்கிறதுனால, சீனியர் கடுப்பாக வாய்ப்பிருக்குது. அதனால எந்த வேலையையும் உடனுக்குடனே முடிக்க பாருங்க. சிலர் வேலை விசயமாக வெளியூர் போக வேண்டியிருக்கும் பாதுகாப்பாக போயிட்டு வாங்க. உங்க ஒய்ஃப் உங்களுக்கு நல்லா சப்போர்ட் பண்றதுனால, ரெண்டு பேரோட ரிலேஷன்சிப் ரொம்பவே நல்லா இருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் நல்லாவே இருக்கும். அவசரப்பட்டு எதையும் பண்றது நல்லதில்லை. உங்களோட கேரக்டரை கொஞ்சம் மாத்திக்கிறது நல்லது. உடன் பிறந்தவங்க உங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருப்பாங்க. ஆடம்பர செலவுகளை குறைச்சிக்கங்க இல்லாட்டி பணம் கடன் வாங்கவேண்டியிருக்கும். மே 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்கு கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நாள் : வெள்ளிக் கிழமை

தனுசு

இந்த வாரம் நெருக்கடிகள் குறையும் என்றாலும் பணத்தைப் பத்தின கவலை உங்களை ரொம்பவே வாட்டி வதைக்கலாம். எதையும் முயற்சி எடுத்து செஞ்சா ஜெயிக்க வாய்ப்பிருக்கு. அவசரத் தேவையை பூர்த்தி செய்யிற அளவுக்கு பணவரவு வரும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனை மேம்படுத்த இந்த வாரம் ஒரு முதலீட்டுல பணத்தை போடுறது நல்லது. அது நிச்சயம் உங்க எதிர்காலத்துக்கு பிரயோஜனமா இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு கவலைங்க வரிசை கட்டி நிக்கும். இருந்தாலும், கவலைப்படுறதுனால பிரச்சனை எதுவும் தீராதுங்கிறதை புரிஞ்சிக்கோங்க. கணவன் மனைவி சண்டை போடாம கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போங்க. எதையும் தைரியமா இருந்து எதையும் ஃபேஸ் பண்றதுக்கு தயாரா இருக்க பாருங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க பாக்கி வைக்காமா எல்லா வேலையையும் முடிப்பீங்க. வார கடைசியில திடீர் பணவரவு வந்து உங்களை திக்கு முக்காட வைக்கும். 27ஆம் தேதி அதிகாலை 1.25 மணி முதல் 29ஆம் தேதி காலை 6.59 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருக்கு கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீல வானம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நாள் : வியாழக் கிழமை

 

மகரம்

ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் அமோகமா இருக்கும். ஏதாவது இண்வெஸ்ட்மென்ட்ல பணத்தை போடுறதுக்கு முன்னாடி, யோசிச்சி ப்ளான் பண்ணிட்டு அதுக்கப்புறமா இண்வெஸ்ட் பண்றது நல்லது. உங்க ஒய்ஃபோட மனசை புரிஞ்சிக்க முடியாம திண்டாடிட்டு இருக்கீங்க. அதனால கொஞ்சம் அவங்க கூட உக்காந்து மனசு விட்டு பேசுறது நல்லது. கணவன் மனைவி பிரச்சனையை தீக்குறதுக்கு கொஞ்சம் உக்காந்து பேசுனீங்கன்னா பிரச்சனை தீருறதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுலயும் சரி, ஆஃபீஸ்லயும் சரி ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமா எடுத்து வைக்கிறது நல்லது. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் நல்ல வாரம் தான். வேலை செய்யிறவங்க வேலையில கவனமாக இருக்கிறது ரொம்ப நல்லது. வியாபாரத்தில மந்த நிலை இருக்கும். வீண் செலவு பண்ணாதீங்க. இந்த வார கடைசியில வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் சான்ஸ் கிடைக்கும். எச்சரிக்கையாக இ பாஸ் எல்லாம் எடுத்துட்டு போங்க. 29ஆம் தேதி காலை 6.59 மணி முதல் சந்திராஷ்டமம் இருக்கு கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நாள் : திங்கள் கிழமை

கும்பம்

கும்பம் ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் பைனான்ஸ் பொசிசன் ரொம்ப நல்லா இருக்கும். வியாபாரத்தில பல பக்கம் இருந்தும் லாபம் வரும். வேலை விசயத்துல சில சிக்கல் வர வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்களுக்கு பரவாயில்லை. வேலை செய்யிற இடத்தில எதிரிகள் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்கிறது நல்லது. எப்படா உங்களை கவுக்குறதுன்னு காத்துக்கிட்டு இருக்காங்க. அதனால கவனமா இருக்க பாருங்க. புதுசா ஃபைனான்ஸியல் ப்ளான் பண்ணுவீங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. ஹெல்த் கண்டிஷன் வார தொடக்கத்துல மந்தமா இருந்தாலும் போகப்போக சரியாகிடும். அதனால எதை செஞ்சாலும் உற்சாகமா செய்வீங்க. கோபத்தை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா எல்லாமே சந்தோஷமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வரலாம் கவனமாக பேசுங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : ஞாயிற்றுக் கிழமை

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. வீட்டுல நல்ல காரியங்கள் நடக்க ஏற்பாடு செய்யலாம். பலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்துலயும் எல்லோருமே சந்தோஷமா அன்பா இருப்பாங்க. வேலை செய்யறவங்களுக்கு ரொம்ப நிம்மதியான நிலைமை ஏற்படும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் நல்லா இருக்கும், எக்ஸ்ட்ரா வருமானத்துக்கும் வழி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும் கொஞ்சம் சேமிக்கிறதுக்கும் வழி கிடைக்கும். ஆஃபீஸ்ல இந்த வாரம் ரொம்ப ஏத்த இறக்கமாவே இருக்கும். பிசினஸ் பண்றவங்க, புதுசா ஒண்ணுல இண்வெஸ்ட் பண்ணலாம். கல்யாணம் ஆன தம்பதிங்களுக்கு மனசு விட்டு பேச இன்னிக்கு டைம் கிடைக்கும். ஒய்ஃபோட அன்புல அப்படியே மெர்சலாகிடுவீங்க. குழந்தைங்க சைடுல இருந்தும் சந்தோஷமான செய்தி வர்றதுக்கு வாய்ப்பிருக்கும். கல்யாணம் ஆகாதவங்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பிருக்கு. லவ் பண்றவங்களுக்குள்ள இருந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துடும். உங்க ஹெல்த் கண்டிசன் இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நாள் : வியாழக் கிழமை

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வாழ்வில் தீராத பிரச்சினையா?.. ஏலக்காயை பூஜை அறையில் வைத்து தினமும் இப்படி வழிபடுங்கள்..!

Anu

தினமும் சொல்ல வேண்டிய சீரடி சாய் பாபா அஷ்டோத்ர சத நாமாவளி

Anu

பாபாவின் நாமத்தை தினமும் இப்படிச் சொல்லி வந்தால் நமது துன்பங்கள் எல்லாம் பறந்தோடிப் போய்விடுமாம்.!!

Anu