உலக நடப்புகள்

யாழில் கொடூர வாள் வெட்டு தாக்குதல் : ஆபத்தான நிலையில் இளைஞன்

யாழ்ப்பாணம் – பாண்டியன்தாழ்வு பகுதியில் மர்ம நபர்குள் நடத்திய கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சந்தனமாதா கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் (வயது – 27) என்ற இளைஞனே தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்ற நபரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றது.

பாசையூரைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் ஒன்றே இந்த கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும் – புது பீதியை கிளப்பும் லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள்

Anu

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றுமுதல் புதிய நடைமுறை…..

Anu

சுவிட்சர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இறந்து பல வாரங்களான பெண்ணின் சடலம்!

Anu